ஈரான் மேற்கொண்ட கடுயைமான ட்ரோன் தாக்குதல்கள் தொடர்பில் கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை முறியடித்ததனை இஸ்ரேல் வெற்றியாக கருத வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பதிலுக்கு ஈரான் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவது பொருத்தமற்றது என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையை மதிப்பதாக வார இறுதியில் அந்த பணியை இஸ்ரேல் சரியான முறையில் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.