இஸ்ரேலின் பதிலடியை எதிர்பார்த்து, ஈரானின்கடற்படை, ஈரானிய வணிகக் கப்பல்களை செங்கடலுக்கு அழைத்துச் செல்வதாக அந்நாட்டின் கடற்படை தளபதி ஷஹ்ராம் இரானி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜமரான் போர்க்கப்பல் ஏடன் வளைகுடாவில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மற்ற நாடுகளின் கப்பல்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல ஈரான் தயாராக இருப்பதாகவும் ஷஹ்ராம் இரானி கூறியுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராகி வருவது குறித்து இன்று (17.04.2024) மீண்டும் இஸ்ரேலின் போர் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
ஈரானிய படையினருடன் ஹவுதிப் படையினர் இணைந்து, இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதால், உலக வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.