எயார் கனடா விமான சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் சிலரது உதவியுடன் பாரியளவில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்து.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
பியர்சன் விமான நிலையத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய பணியாளர்கள் நகையகமொன்றின் உரிமையாளர் உள்ளிட்ட 12 பேர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
20மில்லியன் டொலர் தங்க பிஸ்கட்களில் இதுவரையில் 89000 டொலர் பெறுமதியான களவாடப்பட்ட தங்கமே மீட்கப்பட்டுள்ளது.
களவாடப்பட்ட தங்க பிஸ்கட்கள் உருக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அர்ப்பணிப்புடன் விசாரணைகளை முன்னெடுத்த விசாரணைகளை பாராட்டுவதாக பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார்.