Home கனடா கனடாவில் 400 கிலோ தங்கக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழர் கைது

கனடாவில் 400 கிலோ தங்கக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழர் கைது

by Jey

கனடாவில் பாரியளவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 400 கிலோ கிராம் எடையுடைய தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயத் தாள்கள் கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரம்டனைச் சேர்ந்த 35 வயதான பிரசாத் பரமலிங்கம் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என 12 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்திலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் பணம் என்பன பியர்சன் விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயிருந்தது.

கடந்த ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரசாத் பரமலிங்கம் ஆயுத கடத்தல் சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் 24 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் களவாடப்பட்டுள்ளன.

மிகவும் நுட்பமான முறையில் இந்த தங்கம் அடங்கிய பெட்டி களவாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட விரிவான விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார்.

related posts