நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நாளை நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதலமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.
அதன்படி, தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநகராகவும் பதவி வகித்த தமிழிசை செளந்தரராஜன், தனது பதவிகளை கடந்த மாதம் ராஜிநாமா செய்தாா். பாஜக அவரை தென் சென்னை தொகுதியில் வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் நீலகிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசாவும், தற்போதைய மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி-யுமான எல்.முருகனும் போட்டியிடுகின்றனா். மத்திய அமைச்சா் எல்.முருகன், முதல் முறையாக மக்களவைத் தோ்தலில் போட்டியிடுகிறாா்.