Home கனடா கனடா செல்வதற்காக பயணம் மேற்கொண்ட இலங்கை சிறுவர்கள் ………….

கனடா செல்வதற்காக பயணம் மேற்கொண்ட இலங்கை சிறுவர்கள் ………….

by Jey

கனடாவிற்கு செல்வதற்காக பயணம் மேற்கொண்டபோது, பிரிட்டனில் சிக்கிய இலங்கை சிறுவர்கள் தொடர்பில் பிரிட்டனின் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அதாவது 2021 முதல் பிரிட்டனின் டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள ஐந்து இலங்கை தமிழ் சிறுவர்களும் பிரிட்டனின் சிறுவர்கள் போல தீமையிலிருந்து பாதுகாக்கப்பவேண்டியவர்கள் என பிரிட்டனின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பிரிட்டிஸ் இந்து சமுத்திர பிரதேசத்தின் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

டியாகோகார்சியா தீவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழர்கள் மற்றும் சிறுவர்களிற்கு சார்பாக தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், பிரிட்டனின் சிறுவர் சட்டத்தின் முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் டியாகோர் கார்சியா தீவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் சிறுவர்களிற்கும் பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளது.

சட்டம் டியாகோகார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் சிறுவர்களிற்கு பொருந்தாது தனக்கு அதற்கான கடப்பாடு இல்லை என டியோகோர்கார்சியா தீவின் ஆணையாளர் போல் காண்டிலரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதத்தை பதில் நீதிபதி மார்க்கிரட் ஒபி நிராகரித்துள்ளார்.

விசேடமான உள்ளுர் சட்டம் இல்லாததால் பிரிட்டனின் சட்டம் செல்லுபடியாகும் என அவர் தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் குடியேற்றவாசிகள் 2021ம் திகதி டியாகோகார்சியா தீவை சென்றடைந்தனர் .

இவர்கள் கனடாவிற்கு செல்வதற்காக அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த படகு கடலில் தடுமாறியதை தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டனர்.

புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டிஸ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றனர் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானி உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

related posts