குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அந்தவகையில், குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊவா பரணகம் – அம்பகஸ்தோவ விளையாட்டரங்கில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான தேசிய அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஊடக கேள்வியொன்றுக்கு பதில் அளித்த பிரசன்ன ரணதுங்க தேர்தலை இலக்கு வைத்து அரிசி விநியோகம் செய்யவில்லையெனவும் மற்றும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்கள் இந்த திட்டத்தால் பயனடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் ரணில் விக்ரமசிங்கவை தேர்ந்தெடுத்துள்ளமையினால் மாத்திரமே நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முடிவதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.