Home இந்தியா பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

by Jey

வரும் கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், அமைச்சர் அன்பில் மகேஸ் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் , இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன், மாதிரி பள்ளிகள் இயக்குநர் சுதன் , அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் கோடை வெப்பம் மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட இருப்பதால் விடுமுறை முடிந்து பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வரும் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறை செயல்பாடுகள் மற்றும் மாணவர் சேர்க்கை அதிகரித்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

 

 

 

related posts