Home விளையாட்டு புதிய உலக சாதனை படைத்த இந்தோனேஷிய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர்

புதிய உலக சாதனை படைத்த இந்தோனேஷிய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர்

by Jey

இந்தோனேஷிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான 17 வயது ரொஹ்மாலியா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மங்கோலியா மற்றும் இந்தோனேஷியா அணிகளுக்கு இடையேயான 5ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி, உதயன சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தோனேஷிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து 152 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மங்கோலிய அணி இந்தோனேஷிய அணி வீரங்கனை ரொஹ்மாலியா வீசிய அபார பந்துவீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 24 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் ரொஹ்மாலியா 3.2 ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ரொஹ்மாலியாவைப் பொறுத்தவரை இந்தப் போட்டிதான் அவரது அறிமுகப் போட்டியாக காணப்படுகிறது.

இதற்கு முன்னதாக நெதர்லாந்து அணியின் ஃபிரடெரிக் ஓவர்டிக் மற்றும் அர்ஜென்டினாவின் அலிசன் ஸ்டாக்ஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

 

related posts