Home உலகம் 75 வயதாகும் இங்கிலாந்து மன்னரின் உடல்நிலை கவலைக்கிடம்…..

75 வயதாகும் இங்கிலாந்து மன்னரின் உடல்நிலை கவலைக்கிடம்…..

by Jey

இங்கிலாந்து மன்னர் புற்றுநோயால் பாதிகப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கலவைக்கிடமாக உள்ளதாகவும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2022, செப்டம்பரில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடிய நிலையில் எதிர்பாரா வகையில் அவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார்.

மன்னரின் புற்று நோய் பாதிப்பு வெளியுலகுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளபோதும் , அது எம்மாதிரியான பாதிப்பு எந்த கட்டத்தில் உள்ளது என்பதை மன்னரோ, அரண்மனை நிர்வாகமோ தெரிவிக்கவில்லை.

75 வயதாகும் மன்னரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கான பிரம்மாண்ட இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் அரண்மனை நிர்வாகம் இப்போதே இறங்கி இருப்பதும் தற்போது வெளிப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ’மெனாய் பாலம்’ என்ற மறைமுகப் பெயரிலான மன்னரின் இறுதிச்சடங்கு ஏற்பாட்டுக்கான ஆவணங்கள் தற்போது வெளியே கசிந்துள்ளன.

மெனாய் பாலம் என்பது ஆங்கிலேசி தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் ஒரு தொங்கு பாலத்தின் பெயராகும்.

இதன் பெயரில் தற்போதைய மன்னர் சார்லஸின் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

related posts