Home இந்தியா இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல்

by Jey

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிகளுக்கு சமீபகாலமாக பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசாவிலும் இதன் பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டன.

இந்நிலையில் தற்போது, ஜார்கண்ட் மாநிலத்திக் ராஞ்சி என்ற இடத்தின் அருகிலுள்ள கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு ‘எச்5என்’ வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நோய்த்தாக்கத்துக்கு உள்ளான கோழிகள் அழிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சைகளை வழங்கிய கால்நடை மருத்துவர்கள் இருவர் உட்பட கோழி பண்ணை பணியாளர்கள் அறுவர் என 8 பேர் ராஞ்சியில் உள்ள சதார் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜார்கண்ட் சுகாதாரத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்தபோது,

‘ராஞ்சி சதார் அரசு மருத்துவமனையில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பாதிப்புக்குள்ளான கோழிப் பண்ணையைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏனைய பண்ணைகளிலுள்ள கோழிகள் மற்றும் வாத்துக்களை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் கோழி இறைச்சி, முட்டை என்பவற்றை விற்கவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘எச்5என்1’ வைரஸானது மனிதர்களுக்கு பரவும் ஆபத்து இருப்பதால் ராஞ்சி மருத்துவனையில் ஒட்சிசன் வசதியுடன் கூடிய அறைகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.

எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளார்.

related posts