Home விளையாட்டு நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் வெளியிட்ட கருத்து

நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் வெளியிட்ட கருத்து

by Jey

2024 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது.

இதன்படி, அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அதிரடி துடுப்பாட்ட வீரர் டெவோன் கான்வேயும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

கேன் வில்லியம்சன் தலைமையில், ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி மற்றும் டிம் சவுதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கருத்து வெளியிடுகையில்,

“ஜூன் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள T20 போட்டியின் போது அணிகள் சந்திக்கும் பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள மைதானங்கள் மிகவும் மாறுபட்ட நிலைமைகளை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த நிலைமைகளுக்கு ஏற்ப ஒரு அணியைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

உலகக் கிண்ண அணியில் இணைக்கப்பட்டுள்ள அனைவரையும் வாழ்த்துவதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

related posts