Home உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 3 பொலிஸார் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 3 பொலிஸார் பலி

by Jey

அமெரிக்காவில் வீடொன்றில் பதுங்கியிருந்தவர்கள் பொலிஸார் மீது நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸார் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்ற பொலிஸார் ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வீட்டில் பதுங்கி இருந்த நபர்கள் பொலிஸார் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். இதேவேளை சந்தேக நபர்கள் மீது பொலிஸார் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸார் உயிரிழந்தாகவும், 5 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய ஒரு நபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் தப்பியோடினார். இதையடுத்து, தப்பியோடிய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

 

 

related posts