Home கனடா கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்ல

கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்ல

by Jey

கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்களை பணி செய்ய அனுமதிப்பதால், அவர்களில் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி செய்வதற்கான என மாறிவிடுகிறது என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர்.

கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் பணத்தேவைகளுக்காக, வார்த்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

கோவிட் காலகட்டத்தில் கனடாவில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதை சமாளிக்க, மாணவர்கள் கூடுதலாக சில மணி நேரம் பணி செய்ய அனுமதிக்கப்பட்டது.

அதாவது, கல்வி கற்கும் மாணவர்கள் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம் என்னும் கட்டுப்பாடு அகற்றப்பட்டது.

ஆனால், அந்த விதி, இன்றுடன், அதாவது, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. இனி, கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள், வாரத்துக்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி உண்டு.

related posts