நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015ல் வெளிவந்தது. ஆனால் மக்களிடம் வரவேற்பை பெறாததால் பெரிய தோல்வியடைந்தது.
அதனால் அந்த படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து கடனில் மூழ்கியது.
தங்களுக்கு விருப்பமில்லாத கதையை எடுத்து கமல் நஷ்டம் ஏற்படுத்தினார். படம் பார்த்துவிட்டு நாங்கள் சொன்ன திருத்தத்தையும் அவர் செய்யவே இல்லை என லிங்குசாமி முன்பு பேட்டி அளித்து இருந்தார்.
அந்த நஷ்டத்திற்கு ஈடு செய்யும் விதமாக இன்னொரு படத்தை நடித்து கொடுப்பதாக கமல் எழுத்துபூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் கால் ஷீட் கொடுக்கவில்லை.
இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி தற்போது புகார் கொடுத்து இருக்கிறார்.
கமல் ஒப்புக்கொண்டது போல கால்ஷீட் வாங்கி தர வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார்.