Home கனடா மின் விநியோக நிறுவனம் மீது வழக்குத் தாக்கல் செய்த பெண்

மின் விநியோக நிறுவனம் மீது வழக்குத் தாக்கல் செய்த பெண்

by Jey

கனடாவில் தசாப்தங்களாக அயல் வீட்டவரின் மின் கட்டணத்தை செலுத்திய பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கனடிய மின் விநியோக நிறுவனமான ஹைட்ரோ நிறுவனம் மீது குறித்த பெண் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

தனது மின்மாணிக்கு பதிலாக மின் விநியோக நிறுவனம் அயலவர் வீட்டு பட்டியலை தமக்கு பல தசாப்தங்களாக வழங்கி வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லிஸ் பிக்னெல் கடந்த 2011ம் ஆண்டு மின்சாரக் கட்டணத்தை குறைக்கும் நோக்கில் ஹீட் பம்ப் ஒன்றை பொருத்தியுள்ளார்.

எனினும் இதன் மூலம் தமக்கு எவ்வித நலனும் கிடைக்கப் பெறவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

உண்மையில் இந்த ஹீட் பம்ப் பொருத்தப்பட்டதன் மூலமான நலன் அயலவர் வீட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அயலவர்கள் கூறும் வரையில் தமக்கு மின்கட்டணம் அதிகமாக அறவீடு செய்யப்படுவது தமக்கு தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுளளார்.

மின் விநியோக நிறுவனம் தமக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென கோரி குறித்த பெண் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

related posts