தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து திட்டத்தை ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 12.10.2023 அன்று தொடங்கி வைத்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவதை பாராட்டி The Print ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.