இந்திய வம்சாவளி , அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், நாளை மூன்றாவது முறையாக விண்வெளி பயணம் மேற்கொள்கிறார்.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனமும் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் விண்கலங்களை வடிவமைக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஸ்டார்லைனர் எனப்படும் அந்த விண்கலம் மூலம் முதன்முறையாக மனிதர்களை அழைத்து செல்லும் முயற்சியாக சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் நாளை விண்வெளி செல்ல உள்ளனர்.
அதேவேளை சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே 321 நாட்கள் விண்ணில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.