மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கிட்டதட்ட 37 ஆண்டுகளுக்கு பின் மணி ரத்னம் – கமல் ஹாசன் கூட்டணி இணைந்துள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் நாயகன் திரைப்படத்திற்காக இணைந்திருந்தனர்.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தக் லைஃப் விருந்தாக வந்து அமைந்துள்ளது.
இப்படத்தில் திரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதலில் இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டான நிலையில், தற்போது அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டார்கள் என கூறப்படுகிறது.
இதில் துல்கர் சல்மான் நடிக்கவிருந்த ரோலில் அவருக்கு பதிலாக சிம்பு நடிக்க வந்துள்ளார். இந்த நிலையில், தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்துள்ளதற்காக மாஸ் டீசர் ஒன்றை சிம்புவிற்காக வெளியிட்டுள்ளனர்.