Home உலகம் வாஷிங்டன் பல்கலை.யில் தீவிரமடைந்த போராட்டம்

வாஷிங்டன் பல்கலை.யில் தீவிரமடைந்த போராட்டம்

by Jey

காசாவில் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்தும், போரை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசை வலியுறுத்தியும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் ராணுவம், இன படுகொலை மற்றும் போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற்றப்படும் என அமெரிக்கா உறுதியளிக்கும் வரை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறப்பவதில்லை என்று கூறி கல்லூரி வளாகத்திலேயே கூடாரங்கள் அமைத்து மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடந்த மாணவா் போராட்டம், தலைநகா் வாஷிங்டனிலுள்ள ஜாா்ஜ் வாஷிங்டன் பல்கலைகழகத்துக்கும் பரவியது.

அதையடுத்து அந்தப் பகுதிக்கு புதன்கிழமை அதிகாலை வந்த போலீஸாா், ஆா்ப்பாட்டக்காரா்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா்.

அப்போது சில ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது போலீஸாா் மிளகாய்ப் பொடி தூவியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையின்போது 33 மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளே அமெரிக்க காவல்துறை தீவிரப்படுத்தியது.

 

 

 

related posts