Home உலகம் காசாவில் ஐ.நா பாதுகாப்பு சேவை உறுப்பினர் உயிரிழப்பு

காசாவில் ஐ.நா பாதுகாப்பு சேவை உறுப்பினர் உயிரிழப்பு

by Jey

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஐக்கிய நாடுகளின் சபை பாதுகாப்பு சேவை உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

ரஃபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு வாகனமொன்றில் நேற்று திங்கட்கிழமை (13) சென்றபோது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர் ஆரம்பமானதிலிருந்து பலஸ்தீன பகுதியில் உயிரிழந்த முதலாவது சர்வதேச ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சேவை உறுப்பினர் ஒருவரது இறப்பு என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் ஆரம்பமானதிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் 190 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தாக்குதல்கள் குறித்து கண்டனம் வெளியிட்ட அன்டோனியோ குட்டெரெஸ் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளை விடுவிக்கவும் தனது அவசர வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

related posts