Home உலகம் அல்ஜீரியவில் காணாமல் போன நபர் – 26 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

அல்ஜீரியவில் காணாமல் போன நபர் – 26 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

by Jey

அல்ஜீரிய உள்நாட்டுப் போரில் காணாமல் போன ஒமர். பி என்பவர் 26 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு அல்ஜீரிய உள்நாட்டுப் போரின் போது 19 வயதான ஒமர். பி என்பவர் காணாமல் போனதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இவர் கடத்தப்பட்டிருப்பாரா? என்று அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

அவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டானர். ஆனால், அவரை நீண்ட ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், 26 ஆண்டுகளுக்கு பிறகு, Djelfa நகரில் வைக்கோல்களுக்கு மத்தியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின்பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபரை மீட்டு, விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த நபர் ஒமர். பி என்பது தெரியவந்தது. இதையடுத்து, இவரின் சகோதரர் ஒருவர் தான் ஒமர். பி யை கடத்தி வீட்டிலேயே சிறைபிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.

ஒமர். பி என்பவரின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தான் அவரை சிறைபிடித்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பல ஆண்டுகளாக அவரை சிறைபிடித்து வைத்திருந்ததாக காவல்துறையினரின் விசாரணையில் குற்றவாளி தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக அவருக்கு சரியான உணவு இல்லாததால் உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

related posts