முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் பிரகாஷ் கப்டே என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
விளையாட்டில் ஆர்வமுள்ள இளம் வீரர்களை சந்தித்து ஊக்கமளித்து, அப்போது எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
அவருடையை பாதுகாப்புக்காக மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு பணியில் எஸ்ஆர்பிஎப் வீரர் பிரகாஷ் கப்டேவும் ஈடுபட்டு வந்தார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜாம்னர் நகரைச் சேர்ந்த இவர், சில தினங்கள் முன்தான் சொந்த ஊருக்கு விடுமுறைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், மே 14-ம் தேதி நள்ளிரவு 1:30 மணியளவில் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஜாம்னர் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் ஆய்வாளர் கிரண் ஷிண்டே கூறுகையில், “முதற்கட்ட விசாரணைகளின்படி, சில தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்திருக்கலாம் என சந்திக்கிறோம்.
முழு விசாரணைக்கு பிறகே மற்ற விவரங்கள் தெரியவரும். தற்போது அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.