Home விளையாட்டு சமரி அத்தபத்துவை ஆண்கள் அணியில் இணைத்துக்கொள்ள முடியுமா ……?

சமரி அத்தபத்துவை ஆண்கள் அணியில் இணைத்துக்கொள்ள முடியுமா ……?

by Jey

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்துவை ஆண்கள் அணியில் இணைத்துக்கொள்ள முடியுமா என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரியவிடம் தாம் இந்த கேள்வியை எழுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரில் சமரியை ஆண்கள் அணியில் இணைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உண்டா என தாம் வினவுவதாக தெரிவித்துள்ளார்

ஆண்கள் அணியின் வீரர்களை விடவும் சமரி அபார திறமைகளை வெளிப்படுத்தி வருவதாகவும், ஆண்கள் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் நிலையில் தாம் இந்த கேள்வியை எழுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கிண்ண குழாமில் இணைந்து கொண்டுள்ள வீரர்களை விடவும் சமரியின் ஸ்ட்ரைக் ரேட் அதிகம் என மக்கள் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

சமரி அத்தபத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டாம் என சமரியிடம் கோருவதாகவும், அவருக்கு சம்பள அதிகரிப்பினை வழங்குமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கோருவதாகவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் உலக மக்கள் சமரியின் ஆட்டத்தை விரும்பி ரசிப்பதாகவும் அவர் தொடர்ந்தும் விளையாட வேண்டுமெனவும் அவர் மேலும் கோரியுள்ளார்.

 

 

related posts