Home சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு நதியாவின் மகள்

ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு நதியாவின் மகள்

by Jey

பூவே பூச்சூடவா படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை நதியா. இதற்க்கு முன் சில மலையாள படங்களில் நதியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூவே பூச்சூடவா படத்தை தொடர்ந்து ராஜாதிராஜா, அன்புள்ள அப்பா, சின்னத்தம்பி பெரிய தம்பி என பல படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்த போதே திருமணம் செய்துகொண்டார். 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை நதியாவிற்கு ஜனா, சனம் என இரு மகள்கள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை நடிகை நதியா வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது தனது மகள்கள் இருவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறாரே நதியாவின் மகள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

related posts