கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கனடாவின் Prince Edward Island மாகாணம், 2024, அதாவது, இந்த ஆண்டில், மாகாண நாமினி திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
மருத்துவ அமைப்புக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் மற்றும் வீடுகள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவை எடுக்க இருப்பதாக அம்மாகாணம் அறிவித்துள்ளது.