ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (19/05/2024) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, ஜனாதிபதியால் வடக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.