உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில், காங். தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தில் ஈடுபட்டார் என பகிரப்பட்டு வரும் பதிவு பொய்யானது என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜாவும், காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியும் போட்டியிட்டனர்.
வயநாடு தொகுதி மட்டுமின்றி ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். ராகுல் காந்திக்கு ஆதரவாக ரேபரேலியில் பிரசாரம் செய்ய ஆனி ராஜா சென்றதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், ஆனி ராஜாவும் அவரது கணவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டி.ராஜாவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “வயநாட்டில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஆனி ராஜா, ரேபரேலியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்” என தலைப்பிடப்பட்டிருந்தது. ஆனால் Fact Crescendo விசாரணையில் இது முற்றிலும் பொய் என்று கண்டறியப்பட்டது.