Home கனடா சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகள் சுயாதீனமானவை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகள் சுயாதீனமானவை

by Jey

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கை குறித்து கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விமர்சனம் செய்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸிற்கு எதிராக தண்டனை விதிப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக அண்மையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகள் சுயாதீனமானவை எனவும் அனைவரும் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.

எனினும், ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இஸ்ரேலிய தலைவரையும், இரத்த வெறி பிடித்த ஹமாஸ் இயக்கத் தலைவர்களையும் ஒரே விதமாக பார்ப்பது நியாயமாகுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

related posts