Home உலகம் உலக சாதனை படைத்த ஹுயா பறவையின் ஒரு இறகு

உலக சாதனை படைத்த ஹுயா பறவையின் ஒரு இறகு

by Jey

தற்போது அழிந்து வரும் நியூசிலாந்தின் ஹுயா பறவையின் ஒரு இறகு ஏலத்தில் 46,521.50 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.

முதலில் 3,000 டொலர் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இறகு, இனத்தின் இறகுக்கான முந்தைய சாதனையை 450விகிதம் முறியடித்ததாகக் கூறப்படுகிறது.

ஹுயா பறவை மாவோரி மக்களுக்கு புனிதமானது மற்றும் அதன் இறகுகள் பெரும்பாலும் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் தலைக்கவசமாக அணியப்படுகின்றன.

இது அன்பளிப்பு மற்றும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts