மத்திய கிழக்கின் அமைதிக்காக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய 03 நாடுகள் பலஸ்தீனத்தை தனியொரு நாடாக அங்கீகரித்துள்ளன.
இந்த தீர்மானம் இஸ்ரேலின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டதென நோர்வே பிரதமர் ஜோனாஸ் கஹ்ர் ஸ்டோர் இன்று புதன்கிழமை (22) தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் 28 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பலஸ்தீனம் தனியொரு அரசாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லை எனில் மத்திய கிழக்கில் அமைதி பேணுவது கடினம் என தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் அறிவிப்புக்குப் பின்னர் அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் தனது நாடும் பலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும் என அறிவித்துள்ளார்.
ஸ்பெயினும் இணைந்துக்கொண்டதாக பெட்ரோ சான்செஸ் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிர் அயர்லாந்து மற்றும் நோர்வேயில் உள்ள இஸ்ரேலிய தூதர்களை உடனடியாக நாட்டிற்கு திரும்புமாறு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் அங்கீகாரம் தீவிரவாதம் மற்றும் உறுதியற்ற தன்மையை தூண்டும். மேலும் அவர்களை “ஹமாஸின் கைகளில் சிப்பாய்” ஆக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.