Home உலகம் அவுஸ்திரேலியாவில் வாழ்நாளில் காணாத அளவிற்கு யூதஎதிர்ப்பு

அவுஸ்திரேலியாவில் வாழ்நாளில் காணாத அளவிற்கு யூதஎதிர்ப்பு

by Jey

அவுஸ்திரேலியாவில் வாழ்நாளில் காணாத அளவிற்கு யூதஎதிர்ப்பு உணர்வு தற்போது மோசமாக உள்ளதாக அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

மெல்பேர்னில் யூத பாடசாலையொன்று தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னரே பிரதிபிரதமர் இதனை கூறியுள்ளார். குறிப்பிட்ட பாடசாலையின் முன்பகுதியில் யூத எதிர்ப்பு வாசகங்களை இனந்தெரியாத நபர்கள் எழுதிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் அந்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரிச்சட் மார்லஸ் பாடசாலையின் சுவரில் எழுதப்பட்ட வாசகங்களிற்கு எங்கள் சமூகத்தில் இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதோடு இவ்வாறான உணர்வுகளிற்கு எதிராக அவுஸ்திரேலியா குரல்கொடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் குறித்த அச்ச உணர்வுகளிற்கும் அவுஸ்திரேலியாவில் இடமில்லை என தெரிவித்த பிரதமர், ஏனைய சமூகங்களிற்கு எதிரான கற்பிதங்களிற்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

related posts