“நான் சாதனைகளை பின்தொடர்வதில்லை, சாதனைகள்தான் என்னை பின்தொடர்கின்றன” என கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.
போர்ச்சுல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர்.
உலகிலேயே அதிக கோப்பைகளை வென்ற வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றுள்ளார். 39 வயதாகும் ரொனால்டோ இதுவரை 33 கோப்பைகளை வென்றுள்ளார்.
சர்வதேச கோப்பைகள் மற்றும் இதர உள்ளூர் கோப்பைகள் என மொத்தம் 33 கோப்பைகளை ரொனால்டோ கைப்பற்றுள்ளார்.
து இந்த ஆண்டிற்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பிற்கான தேசிய அணியின் 26 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்பு 2004, 2008, 2012, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற யூரோ கோப்பையில் ரொனால்டோ கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து இந்தாண்டு நடைபெற இருக்கும் யூரோ கோப்பைக்கான அணியிலும் ரொனால்டோ இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் யூரோ கோப்பையின் 6 சீசனில் இடம்பிடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெறுவார்.
இதற்கு முன்னதாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த காசிலாஸ் என்ற வீரர் ஐந்து முறை யூரோ கோப்பைகளில் பங்கேற்றிருந்தார். இவரின் சாதனையை ரொனால்டோ தற்போது முறியடிக்கவுள்ளார். இந்நிலையில் யூரோ கோப்பைகளில் அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையையும், அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றுள்ளார்.
இதையடுத்து, தற்போது “நான் சாதனைகளை பின்தொடர்வதில்லை, சாதனைகள்தான் என்னை பின்பற்றுகின்றன” என கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.