மக்களவைத் தேர்தல் முடிவடையும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு நேற்று மாலை சென்றுள்ளார்.
கன்னியாகுமரி கடலிலுள்ள பாறையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவிடத்துக்குச் சென்றவர் அங்கே தனது 3 நாள் தியானத்தை ஆரம்பித்துள்ளார்.
அவர் தியானம் செய்யவுள்ள 45 மணிநேரமும் வெறும் பழச்சாறு, இளநீர் போன்ற திரவ உணவுகளையே எடுத்துக் கொள்வாராம்.
இந்நிலையில் சரியாக 33 வருடங்களுக்கு முன், இதே விவேகானந்தர் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி விஜயம் செய்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
1991ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி பா.ஜனதாவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் இளம் தலைவராக மோடி அவர்களும் வந்துள்ளார்.
எனவே அவர்கள் இருவரும் விவேகானந்தர் சிலையை பார்வையிடும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.