இந்தியாவில் நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் ஒடிசா , பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.