நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தின் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிக்கு நியூயார்க் நகரின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியானது, ஜூன் மாதம் 9ஆம் திகதி நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு ஈர்க்கப்படவுள்ளார்கள்.