அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவின் தாயார் காலமானார். 86 வயதில் மரியன் ரொபின்சன் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தனது தாயின் இறப்பு செய்தி குறித்து மிச்செல் ஒபாமா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“எங்கள் முழு குடும்பத்திற்கும் அவர் உறுதுணையாக இருந்தார். இன்று அவர் உயிரிழந்தது விட்டார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மனம் உடைந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
பாராக் ஒபாமா மனைவியின் தாயாரின் உயிரிழப்பு குறித்து, ஒரு மரியன் ரொபின்சன் மட்டுமே இருந்தார் இருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சிக்காகோவில் ஏழு பிள்ளை கொண்ட குடும்பத்தில் மரியன் ரொபின்சனும் ஒருவராக 1937 ஆம்அண்டு பிறந்துள்ளார்.
மரியன் ரொபின்சன் செயலாளராக பணிபுரிவதற்கு முன்பு ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் சிகாகோவின் தெற்குப் பகுதியில் தனது கணவர் ப்ரேசியர் ரொபின்சனுடன் மிச்செல் மற்றும் அவரது மற்றைய பிள்ளை கிரேக் ஆகியோருடன் வாழ்ந்துள்ளார்.