Home கனடா கனடாவில் முதல் தடவையாக மளிகைக் கடை அறிமுகம்

கனடாவில் முதல் தடவையாக மளிகைக் கடை அறிமுகம்

by Jey

கனடாவில் முழுக்க முழுக்க இலவசமாக பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய மளிகைக் கடையொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நாட்டில் முதல் தடவையாக இவ்வாறு மளிகைக் கடையொன்று அறிமுகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

றெஜீனாவில் இலவசமாக மளிகைப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய கடை காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படுவது போன்று வறிய மக்களின் நலனை கருத்திற் கொண்டு ஒர் உணவு வங்கியே, முழு அளவிலான இலவச மளிகைக் கடையாக உருவாக்கப்பட்டுள்ளது.

றெஜினாவில் சுமார் 25 வீதமானவர்கள் உணவு வங்கியைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நகரில் பாரியளவில் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாதாந்தம் 16000 பேர் உணவு வங்கியின் சேவையை பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய உணவு வங்கியானது மரபு ரீதியான மளிகைப் பொருள் கடையின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த மளிகைப் பொருள் விற்பனை நிலையம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.

 

related posts