Home உலகம் ஜேர்மனியில் நிலவும் சீரற்ற காலநிலை

ஜேர்மனியில் நிலவும் சீரற்ற காலநிலை

by Jey

ஜேர்மனியில் நிலவும் சீரற்ற காலநிலையால் சில பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனின் பவேரியா, பேடன் வுர்ட்டம் பேர்க் மாகாணங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் , மக்கள் தங்குவதற்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

related posts