தமிழ்நாட்டில் முதன்முறையாக 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், பாஜக 10 சதவீத வாக்குகளை முதல் முறையாக பெற்றுள்ளது.
அதன்படி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 10.21 சதவீத வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளியான வாக்குகளின் படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.
அதேநேரம் அதன் கூட்டணி கட்சியான பாமக தர்மபுரி தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
அதேநேரம் வாக்கு சதவீதம் என்பது இரட்டை இலக்கத்தில் இருக்கிறது. அதாவது பாஜக 20 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளுடன் 10.54 சதவீதம் வாக்குகளை பெற்று 4வது பெரிய கட்சி என்கிற நிலையை பிடித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் வெறும் 0.33 சதவீதம் தான் வித்தியாசம் ஆகும். காங்கிரஸ் கட்சி 10.91 சதவீதம் வாக்குகள் பெற்று போட்டியிட்ட 9 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் சுமார் 21 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளது.
இதேவேளை நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் எத்தனை சதவீதம் வாக்குகள் வாங்கியது என்பது குறிப்பிடப்படவில்லை. கட்சிகள் அல்லாதவர்கள் தமிழகத்தில் 21 சதவீதம் வாக்குகள் வாங்கி உள்ள நிலையில் அதில் நாம் தமிழர் கட்சி வாக்குசதவீதமும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.