Home இலங்கை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்கக் கூடாது

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்கக் கூடாது

by Jey

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த முகாம்களுக்குச் செல்லாமல் சில வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்படட அரசாங்கத்தின் சுற்றறிக்கையால் கிராம உத்தியோகத்தர்கள் கிராமத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே சமைத்த உணவு அரசாங்கத்தினால் வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த வீடுகளில் தங்கியுள்ள மக்களும் அரசாங்கத்தினால் சமைத்த இந்த உணவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் முகாம்களுக்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை திருத்தப்பட வேண்டும் என கிராம அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த அனர்த்த முகாமைத்துவ சுற்றறிக்கை நிறைவேற்றப்பட்டதன் காரணமாக, இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இல்லாத இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுக்கான அரச ஒதுக்கீட்டை ஒதுக்குவதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் முன்வருவதில்லை என கிராம அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

 

related posts