Home கனடா வங்கிக் கிளைகளுக்கு செல்ல நாட்டம் காட்டாத கனடிய மக்கள்

வங்கிக் கிளைகளுக்கு செல்ல நாட்டம் காட்டாத கனடிய மக்கள்

by Jey

கனடிய பிரஜைகள் வங்கி கிளைகளுக்கு செல்ல விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கே.பி.எம்.ஜீ என்னும் கணக்காய்வு நிறுவனம் இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.

நாளந்த வங்கித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு வங்கிக் கிளைகளுக்கு மக்கள் செல்ல நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 48 வீதமானவர்கள் ஆண்டொன்றில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே வங்கிக் கிளைகளுக்கு செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இணைய வழியில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், வங்கி கிளைகள் இயங்க வேண்டுமென 86 வீதமானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கிராமிய பகுதிகளில் கிளைகளை தொடர்ந்தும் வங்கிகள் பேண வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பணத்தை வைப்பிலிடுதல் அல்லது மீளப் பெற்றுக்கொள்ளல் ஆகிய தேவைகளுக்காகவே வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts