இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
151 போட்டிகளில் விளையாடி அதில் 94 கோல்களை பதிவு செய்ததோடு 50 சர்வதேச கோல்கள் அடித்த முதல் இந்திய வீரரும் ஆவார்.
இந்நிலையில் நேற்றைய தினம் குவைத்துக்கு எதிரான போட்டி நடைபெற்று முடிந்து மைதானத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறியுள்ளார் சுனில்.
மைதானத்தை சுற்றி சுனில் சேத்ரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பேனர்கள், பதாகைகள் போன்றவற்றை அவரது ரசிகர்கள் ஏந்தி நின்றனர்.
இவரது ஓய்வு குறித்து கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை குறிப்பிட்டுள்ளார்.
அதில், ஒரு கோல் அடிப்பது எளிதான விடயமல்ல. சர்வதேச போட்டிகளில் தனியாளாக நின்று 94 கோல்கள் அடித்துள்ளார். இந்தியாவின் கொடியை உயர்த்தியுள்ள இவரின் மறக்க முடியாத கால்பந்து பயணத்துக்கு எனது வாழ்த்துக்கள். என பதிவிட்டுள்ளார்.