கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாக பதிவாகியுள்ளது.
இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 0.1 வீத அதிகரிப்பாகும்.
இதேவேளை, மே மாதம் கனடிய பொருளாதாரத்தில் 27000 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வட்டி வீத அதிகரிப்பு காரணமாக தொழிற்சந்தை பலவீனமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், கனடிய மத்திய வங்கி சிறிதளவு வட்டி வீத குறைப்பினை இரண்டு தினங்களுக்கு முன்னதாக அறிவித்துள்ளது.