வடகொரியாவுக்கு எதிரான பிரசார ஒலிபெருக்கியை தென்கொரியா மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் , இந்த செயல் வடகொரிய அதிபருக்கு கோபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்தநிலையில் தற்போது நூற்றுக்கணக்கான பலூன்களை தென்கொரியா எல்லையில் வடகொரியா பறக்க விடுகிறது.
இதன்மூலம் சிகரெட் துண்டுகள், பேட்டரி உள்ளிட்ட குப்பைகளை தென்கொரியா எல்லைக்குள் வடகொரியா கொட்டியதனால் ஆத்திரம் அடைந்த தென்கொரியா 2018-ல் போடப்பட்ட வடகொரியா உடனான ராணுவ ஒப்பந்தத்தை நிறுத்தியது.
இதனையடுத்து வடகொரியாவுக்கு எதிரான பிரசார ஒலிபெருக்கியை தென்கொரியா மீண்டும் தொடங்க முடிவு செய்து உள்ளது.
அதன்படி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் எதிர்ப்பு பிரசாரம் மற்றும் பிரபல தென்கொரிய பாடல்கள் போன்றவை ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படும்.
அதோடு வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுமார் 2 லட்சம் துண்டுச்சீட்டுகளும் தென்கொரிய எல்லையில் பறக்க விடப்பட உள்ளமையானது கிம் ஜாங் அன்னின் கோபத்தை தூண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.