தெற்கு குவைத்தில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் குறைந்தது நான்கு இந்தியர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் மலையாள மக்கள் அதிகம் வசிக்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காயமடைந்தவர்கள் அனைவரும் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.