Home இந்தியா அருணாச்சல் பிரதேசத்தில் மூன்றாவது முறையாகவும் முதல்வராக பெமா காண்டு

அருணாச்சல் பிரதேசத்தில் மூன்றாவது முறையாகவும் முதல்வராக பெமா காண்டு

by Jey

இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தில் தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் பெமா காண்டு முதல்வராக இன்று வியாழக்கிழமை (13.06.24) பதவியேற்றுள்ளார்.

அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா மற்றும் பாஜக கட்சியினர் பங்கேற்றனர்.

இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றது.

பாஜக 10 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி பெற்றது. போட்டியின்றி வெற்றி பெற்ற வேட்பாளர்களில் முதல்வர் பெமா காண்டுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts