பிலிப்பைன்ஸ் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மீது, சீன கடலோரக் காவல் படைக் கப்பல் மோதியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சா்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தென் சீன கடலின் அனைத்து பகுதிகளுக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
அதேவேளை, அந்தக் கடல் பகுதியில் தங்களுக்கும் உரிமையுள்ளதாக பிலிப்பின்ஸ், மலேசியா, மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளும் கூறிவருகின்றன.
இதன் காரணமாக அந்த நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
இவ்வாறான நிலையிலேயே தென் சீன கடற்பகுதியில் இரு நாட்டு கடற்படைக் கப்பல்களும் மோதியுள்ளமை மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.