கனடாவில் வறிய மக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த கால மதிப்பீடுகளை விடவும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனடிய உணவு வங்கிகளின் அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
25 வீதமான கனடியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வறியவர்களின் எண்ணிக்கை 10 வீதம் என அறிக்கையிட்டிருந்தது.
எனினும், வறியவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்பாரா செலவுகள், விசேட நிகழ்வுகள், பற்சுகாதாரம், பரிசுப் பொருள் கொள்வனவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான காரணிகளின் அடிப்படையில் கனடாவில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை மேலும் ஆறு மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.