Home கனடா கனடாவில் ஆட்டம் காணும் லிபரல் கட்சி

கனடாவில் ஆட்டம் காணும் லிபரல் கட்சி

by Jey

கனடாவில் லிபரல் கட்சியின் மீதான மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் சரிவடைந்து செல்லும் நிலையை அவதானிக்க முடிகின்றது.

டொரன்டோவின் சென் போல்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.

நீண்ட காலமாக லிபரல் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்த இந்த தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட டொன் ஸ்டுவர்ட் இந்த இடைத் தேர்தலில் வெற்றி ஈட்டியுள்ளார்.

ஸ்டுவர்ட் 590 மேலதிக வாக்குகளின் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

ஸ்டுவர்ட் 15555 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த தேர்தல் வெற்றி ஆளும் லிபரல் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் இதன் எதிரொலியாகவே இடைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளதாக சில தரப்பினர் விமர்சனம் செய்துள்ளனர்.

related posts